23,May 2025 (Fri)
  
CH

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி அறிவித்த டிரம்ப்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரும் மாதம் முதல் 50% பரஸ்பர வரி விதிக்க பரிந்துரைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


அதன்படி, ஜூன் 1 முதல் சொகுசு பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.


தனது Truth Social கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிடம் இருந்து வர்த்தக நன்மைகளைப் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டது என அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


மேலும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத ஐபோன்களுக்கு 25% இறக்குமதி வரியை விதிக்கவும் அமெரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.


இதன் மூலம், அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எங்கோ உற்பத்தி செய்யப்படுவதற்கு பதிலாக, அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு பல்வேறு சுங்கவரிகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் உற்பத்தியை உயர்த்துவதற்கும், வெளிநாட்டு போட்டியிலிருந்து அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதற்குமான ஒரு வழிமுறையாக இதனை தான் பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்




ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி அறிவித்த டிரம்ப்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு