23,Aug 2025 (Sat)
  
CH

நாளை 3,147ம் தாதியர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, நாளை(24) சனிக்கிழமை காலை அலரி மாளிகை வளாகத்தில் உள்ள கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் அதிக எண்ணிக்கையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.


இந்த விழாவுடன் இணைந்து, தாதியர் சேவையில் 79 சிறப்பு தர அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்படும்.


பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தலைமையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த விழாவில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர், டாக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள்

கலந்து கொள்வார்கள்.




நாளை 3,147ம் தாதியர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு