சுவிட்சர்லாந்து அரசு 3.5 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
விசேட விமானம் மூலம் இன்று சூரிச்சிலிருந்து 16 டன் பொருட்களுடன் இலங்கைகயை வந்தடைந்துள்ளது.
அரை மில்லியன் அன்டிஜென் சோதனை கருவிகள், 50 வென்டிலேட்டர்கள், 150 ஒக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் சோதனை பொருட்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் இவ்வாறு அனுப்பியுள்ளது.
இலங்கையின் கடுமையான பொது சுகாதார நிலைமைக்கு பதிலளிக்கும் விதமாகவும், COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் இவ்வாறு உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது.
இலங்கை அதிகாரிகள் வழங்கிய தேவைகளின் அடிப்படையில், சுவிட்சர்லாந்து வழங்கக்கூடிய பொருட்களின் பட்டியல் மத்திய பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் மத்திய உள்துறை திணைக்களத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் வரையறுக்கப்பட்டது.
இதனையடுத்து, ஒரு விமானம் இன்று சூரிச்சிலிருந்து 16 டன் பொருட்களுடன் இலங்கைகயை வந்தடைந்துள்ளது.
இந்த பொருட்கள் இலங்கை சுகாதார அமைச்சின் பிரதிநிதிகளால் கொழும்பில் பெறப்பட்டு பின்னர் வெவ்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்படும்.
இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால், பொருட்கள் நியாயமான முறையில் மற்றும் மனிதாபிமான கொள்கைகளுக்கு ஏற்ப விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..