25,Apr 2024 (Thu)
  
CH
உலக செய்தி

ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பு

ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மருந்தின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொய்னா மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இத்தாலி ஸ்பெயின் நாடுகளை வீழ்த்திவிட்டு அமெரிக்கா பக்கம் திரும்பிய போது ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது.

ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக அளவில் ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் தேவை திடீரென அதிகரித்தது.

சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தி ஆய்வுகள் செய்து வருகின்றன.

அமெரிக்காவை கொரோனா தாக்குதலில் இருந்து காக்க ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் அதிகம் தேவை என இந்தியாவிடம் கோரிக்கை வைத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டலும் விடுத்து ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மருந்தை அதிக அளவில் பெற்றுக்கொண்டார். ஒரு கட்டத்தில் நான் ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மருந்தை தினமும் சாப்பிடுகிறேன் , உங்கள் முன் நலமாக இருக்கிறேன் எனவும் அறிவித்தார் ட்ரம்ப்.




ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம்: உலக சுகாதார அமைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு