செங்கலடி பிரதேச செயலாளர் பாலியல் இலஞ்சம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பில் இருந்து வருகைதந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் பிரதேச செயலகத்திற்கு சேவை பெறச் சென்ற பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற்றமை மற்றும் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவரை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியமை தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் கொழும்பு பொலிஸ்மா அதிபர் திணைக்களத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணால் முறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று கொழும்பில் இருந்து சென்ற உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட இரண்டு சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர்களிடம் இருந்த வீடியோ, ஓடியோ ஆதாரங்களையும் பெற்றுச் சென்றுள்ளனர். இதன்படி செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகளை உள்நாட்டலுவல்கள் அமைச்சு விரைவில் மேற்கொள்ளும் என ரெவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..