01,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

கடலில் குதித்த மீனவரை விழுங்கிய ராட்சத திமிங்கலம்! பின்னர் நடந்த அதிசயமான சம்பவம்

அமெரிக்காவில் லாப்ஸ்ட்டர் பிடிக்கச் சென்ற மீனவரை ராட்சத திமிங்கலம் ஒன்று விழுங்கி, 40 நொடிகள் கழித்து கக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


பாதிக்கப்பட்ட மீனவர் தற்போது உயிருக்கு பிரச்சினை இன்றி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவில் Massachusetts மாகாணத்தில், கிட்டத்தட்ட 90 சதவீதம் கடலால் சூழப்பட்ட நகரமான Provincetown-ஐ சேர்ந்தவர் Packard (56).


ஆழ்கடலில் லாப்ஸ்ட்டர் எனும் ராட்சத இறால்களைப் பிடிப்பதையே சுமார் 40 ஆண்டுகளாக தொழிலாக செய்து வரும் இவர், வெள்ளிக்கிழமை காலை, Cape Cod கடலில் லாப்ஸ்ட்டர் டைவிங் செய்துள்ளார்.


அப்போது கடலில் தனது வேலையை செய்துகொண்டிருந்தபோது, அவரை எதோ ஒன்று பலமாக இடித்தது போல தெரிந்துள்ளது, அடுத்த சில நொடிகளில் அவருக்கு அனைத்தும் இருட்டாக மாறியுள்ளது.


அப்பகுதி great white sharks எனும் சுறா மீன்கள் சுற்றித்திரியும் இடம் என அறிந்த Packard, தான் சுறாவால் விழுங்கப்பட்டு விட்டோம் என நினைத்துள்ளார்.


ஆனால் என்னைச் சுற்றி பற்கள் ஏதும் இல்லை என்பதை உணர்ந்தேன். பின்பு தான் தெரிந்தது நான் திமிங்கலத்தின் வாயில் மாட்டிக்கொண்டு இருக்கிறேன். அது என்னை விழுங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.


அவ்வளவு தான் எனது வாழக்கை முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டு, எனது மனைவி மற்றும் 2 மகன்களை நினைத்துக்கொண்டேன்.


ஆனால் சில நொடிகளில் நான் கடலில் மேற்பரப்புக்கு வந்துவிட்டது தெரிந்தது. நான் விடுவிக்கப்பட்டதை உணர்ந்தேன், கடல் பரப்பில் மிதந்து கொண்டிருந்தேன். இப்போது நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை" என Packard கூறினார்.


அவர் சுமார் 30 முதல் 40 நொடிகளுக்கு திமிங்கலத்தின் வயிற்றுக்குள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.


நீரின் மேற்பரப்பிற்கு வந்த அவரை, அவருடன் மீன் பிடிக்கச் சென்ற குழு நண்பர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக Packard-க்கு உடலில் எந்த காயங்களும் ஏற்படவில்லை. ஆனால் அவரது கால் எலும்பு மட்டும் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


அவரை விழுங்கியது ஒரு Humpback திமிங்கலமென கூறப்படுகிறது. ஹம்ப்பேக் திமிங்கலங்கள் 50 அடி (15 மீ) வரை வளரக்கூடியது மற்றும் சுமார் 36 டன் எடையுள்ளதாக இருக்கும்.


பொதுவாக திமிங்கலங்கள் மனிதர்களை விழுங்கியதாக எந்த பதிவுகளும் இல்லை, அப்படி கேள்விப்பட்டதும் இல்லை என கூறிய வல்லுநர்கள், இது எதிர்ச்சியாக நடந்த ஒரு சம்பவம் என கூறினார்.


அந்த திமிங்கலம் தன் வாயை பிளந்து மீன்களை மொத்தமாக பிடிக்கும் முயற்சியில் இருந்திருக்கும், அப்போது தெரியாமல் Packard-யையும் சேர்த்து விழுங்கியிருக்கும். அதனால் தான் அவரை சில நொடிகளில் கக்கி வெளியேற்றியுள்ளது என கூறுகின்றனர்.




கடலில் குதித்த மீனவரை விழுங்கிய ராட்சத திமிங்கலம்! பின்னர் நடந்த அதிசயமான சம்பவம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு