ரஷ்ய பல்கலை கழகத்தில் படித்து வந்த அமெரிக்காவை சேர்ந்த மாணவி அறிமுகம் இல்லாத நபருடன் காரில் செல்லும்போது கடைசியாக தனது தாயாருக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
ரஷ்யாவில் நிஜ்னி நவ்கரோடு பகுதியில் உள்ள லோபசெவ்ஸ்கை பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் கேத்தரீன் செரவ் (வயது 34). அமெரிக்காவை சேர்ந்தவரான செரவ் கடந்த செவ்வாய் கிழமை காணாமல் போயுள்ளார்.
இதுபற்றி கடந்த வியாழகிழமை போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில், அறிமுகம் இல்லாத நபருடன் காரில் செல்லும்போது கடைசியாக தனது தாயாருக்கு செய்தி அனுப்பியுள்ளார். நான் கடத்தப்படவில்லை என நம்புகிறேன் என்று அதில் தெரிவித்து உள்ளார்.
எனினும், மருத்துவமனைக்கு செல்வதற்கு பதிலாக கார் காட்டுக்குள் சென்றுள்ளது என கூறப்படுகிறது. காட்டில் உள்ள டவரில், செரவின் செல்போன் அழைப்பு சென்றது பதிவாகி உள்ளது. இதுபற்றி 40 வயதுடைய நபர் ஒருவரை விசாரணை குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நாங்கள் நிலைமையை உன்னிப்புடன் கண்காணித்து வருகிறோம் என அமெரிக்க தூதரகம் தெரிவித்து உள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கடந்த காலங்களில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஆவார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..