06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

புலம்பெயர்ந்த வர்களின் வாரிசுகள் சாதனை

உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்த வர்களின் வாரிசுகள் கல்வியில் பெரும் சாதனை பாடைத்து வருகிறார்கள்.

அதுவும் சாதாரணமாக அல்ல. வைத்தியராக, பொறியியலாளராக, விமான ஓட்டியாக, விஞ்ஞானியாக என அடிக்கிக் கூறலாம். 

அவ்வகையில் சுவிசில் இன்று (10-07-2021) நடைபெற்ற வைதியர்களுக்கான பலலைக்கழக பரீட்சையில் 1500 மாணவர்களும் கிட்டத்தட்ட 100 மாணவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பதில் பெருமைகொள்ளலாம். 

40 வருடத்துக்குள் ஒரு அகதியாக வ ந் த இனத்தின் வாரிசுகள் சாத்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. 

இதுவரை 25 இற்கும் மேற்பட்ட தமிழ் வைத்தியர்கள் கடமையில் இருப்பதும் சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் ஆகிறது. 

இன்று சுவிஸ் பல்கலைக்கழகங்களுக்கான மருத்துவ மாணவர்களுக்கான அனுமதிப்பரீட்சை நடைபெற்றது.

சூரிச் Messe பரீட்சை நிலையத்தில் அண்ணளவாக 1500 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 

கிட்டத்தட்ட 90க்கு மேற்பட்ட தமிழ் மாணவர்களும் பரீட்சையில் பங்கேற்றனர்.

0.6 சதவீதமான மாணவர்கள் தமிழ் மாணவர்களாவர்.

வெறும் 25-30 வருட புலம்பெயர் தமிழ் சமூகத்தின் வாரிசுகள், கல்வியில் சுவிஸ் நாட்டில் சிறந்த வகிபாகத்தினை எதிர்காலத்தில் பெறுவர் என்பது திண்ணம்.

தற்போது வரை 22 தமிழ் வைத்திய நிபுணர்கள் சுவிஸ் வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர்.

இவர்கள் மட்டும் அல்ல கிட்டத்தட்ட தமிழ் வாரிசுகளில் 90% ஆனவர்கள் அடுத்தபடியான வங்கிகளிலும் உயர் பதவிகளில் மற்றும் அலுவலக உத்தியோகங்களிலும் உள்ளார்கள். 

இந்த முன்னேற்றம் தொடரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




புலம்பெயர்ந்த வர்களின் வாரிசுகள் சாதனை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு