சர்வதேச முதலீடுகளை தடுக்கவும், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தவுமே எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
சர்வதேசத்தை எமக்கு எதிராக திருப்பி, சர்வதேச முதலீடுகளை தடுக்கவும், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளி அதன் மூலமாக ஆட்சி மாற்றத்தை செய்யவுமே எதிர்க்கட்சியினர், மங்கள சமரவீர, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் முயற்சிக்கின்றனர்.
ஏற்கனவே மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் போன்ற வெவ்வேறு குற்றச்சாட்டுக்களில் இலங்கையை நெருக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்ற நிலையில் பொருளாதார ரீதியிலும் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவதே இவர்களின் நோக்கமாகும். அதற்கான செய்தியை இவர்கள் சர்வதேசத்திற்கு வழங்கி வருகின்றனர் என்றார்.
0 Comments
No Comments Here ..