20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

நாட்டில் தொடரும் அச்சுறுத்தல்! சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் மேலும் 539 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 1,919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3, 01, 811 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2, 71, 855 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.





நாட்டில் தொடரும் அச்சுறுத்தல்! சவேந்திர சில்வா வெளியிட்டுள்ள தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு