டோக்கியோ ஒலிம்பிக்கில் வெனிசுலா வீராங்கனை யுலிமார் ரோஜாஸ் 15.67 (+0.7) மீட்டர் தூரம் தாண்டி உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான லாங்க் ஜம்ப் போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிச் சுற்றில் 12 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் 6 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் எது அவர்களுடைய சிறப்பான தாண்டுதலோ, அது போட்டி முடிவுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அதன்படி வெனிசுலாவின் யுலிமார் ரோஜாஸ் 6-வது வாய்ப்பில் 15.67 (+0.7) மீட்டர் தூரத்திற்கு தாண்டினார். மற்ற வீராங்கனைகள் இந்த தூரத்தை விட குறைவாகவே தாண்டியதால் யுலிமார் ரோஜாஸ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் தாண்டியது உலக சாதனையாகும். அத்துடன் வெனிசுலாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..