24,Apr 2024 (Wed)
  
CH
விளையாட்டு

பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்

ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன் என சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

39 வயதான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ், கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

எனினும், தற்போது பாகிஸ்தான் அணிக்காக ஒரு நாள் போட்டி மற்றும் ரி-20 போட்டிக்கான அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்தநிலையில் நடப்பு ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடருடன் ஓய்வு பெற அவர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வருடத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டாலும் பாகிஸ்தான் அணிக்காக விளையாட நான் தயாராக உள்ளேன்

இடக்கை துடுப்பாட்ட வீரர்கள் என் பந்துவீச்சை எதிர்கொள்ள எப்போதும் தடுமாறுவார்கள். வலது கை துடுப்பாட்ட வீரர்களுக்கும் நான் நன்றாகப் பந்துவீசியுள்ளேன். இரு வகை துடுப்பாட்ட வீரர்களுக்கும் என்னுடைய எகானமி ரேட் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும்.

பிரையன் லாராவையும் நான் வீழ்த்தியுள்ளேன். என் பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமமாக உள்ளதாக லாரா என்னிடம் கூறியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களை அருமையாக அவர் எதிர்கொள்வார். உலகத் தரமான துடுப்பாட்ட வீரர்; அவர்’ என கூறியுள்ளார்.

துடுப்பாட்ட சகலதுறை வீரரான மொஹமட் ஹபீஸ், ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக அதாவது, பந்துவீசும் போது மணிக்கட்டு 15 பாகைக்கு மேல் வளைவதாக பலமுறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு அவரது பந்து வீச்சு முறையற்றதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது பந்து வீச்சை சரி செய்தார்.

இதன்பிறகு 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் உள்ளூர் ரி-20 தொடரான சுப்பர் லீக் தொடரில், முறையற்ற வீதத்தில் பந்து வீசுவதாக தடை விதிக்கப்பட்டது.

அத்தோடு கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம், இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் பந்து வீச தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.




பாகிஸ்தான் அணிக்காக விளையாட தயாராகவுள்ளேன்: ஹபீஸ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு