26,Apr 2024 (Fri)
  
CH
விளையாட்டு

அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு ஆதரவுக்கரம் நீட்டும் முன்னாள் தலைவர்!

இங்கிலாந்து அணியிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு, அணியின் முன்னாள் தலைவரான நாசர் ஹூசைன் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

தான் செய்த தவறுகளுக்காக ஒருவருட காலப்பகுதிக்கும் மேல் அணியில் இடம்பெறமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு, இன்னொரு வாய்ப்பு கொடுக்குமாறு நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அவர் ஒரு குற்றம் செய்தார். அதற்கான தண்டனையை அனுபவித்து, உலகக் கிண்ண தொடரில் விளையாடுவதையும் தவறவிட்டுவிட்டார். லார்ட்ஸ் மைதானத்தின் சிறந்த நாள் அவருக்கு அமையவில்லை. இந்த விலை போதாதா? இதற்கு மேலும் தான் செய்த தவறுக்காக அவர் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?

அலெக்ஸ் ஹேல்ஸுக்கும் மற்றவர்களுக்கும் வௌ;வேறு விதிமுறைகள் இருக்கக்கூடாது. அவருக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படாமல் மீண்டும் எப்படி விளையாட முடியும்? அவரிடம் இந்தளவுக்குக் கடுமையாக நடந்துகொள்ளக் கூடாது’ என கூறினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு சகவீரரான பென் ஸ்டோக்சுடன் இரவு விடுதியொன்றில், இளைஞரொருவரை தாக்கிய சம்பவத்திற்கு பிறகு, அலெக்ஸ் ஹேல்ஸின் வருகையை இங்கிலாந்து கிரிக்கெட் சபை விரும்பவில்லை.

எனினும், அவரது ஆக்ரோஷமான துடுப்பாட்டம் தேர்வுக் குழுவின் எண்ணத்தை மாற்ற, கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடருக்கான ஆரம்ப அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

பின்னர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார். அலெக்ஸ் ஹேல்ஸ் முதற்தடவையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியிருந்த போது, அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு, மீண்டும் அணியில் இணைக்கப்பட்டிருந்தார். எனினும், இரண்டாவது தடவையாக ஊக்கமருந்து சர்ச்சையில், சிக்கியதால், அணியின் கலாச்சாரத்தை மீறி செயற்படுவதன் காரணமாக அலெக்ஸ் ஹேல்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதன்பிறகு சுமார் ஒருவருட காலப்பகுதியாக தேசிய அணிக்காக இணைத்துக்கொள்ளப்படவில்லை. எனினும், ரி-20 லீக் தொடர்களான பிக் பேஷ் மற்றும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர்களில் விளையாடினார்.

தற்போது நடப்பு ஆண்டு நடைபெறும் ரி-20 உலகக்கிண்ண தொடரை கருத்திற் கொண்டு அவர், அணியில் இடம்பெறுவதற்கு முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் தற்போது வலுவாக உள்ளதால் ஹேல்ஸ்க்கு அணி கிடைப்பது கடினம்.

31 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ், இதுவரை 11 டெஸ்ட், 69 ஒருநாள் மற்றும் 60 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு ஆதரவுக்கரம் நீட்டும் முன்னாள் தலைவர்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு