16,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

அரசியல் தேவைகளுக்காக தீர்மானங்களை எடுக்காதீர் - எதிரணி எம்.பி கோரிக்கை

கொவிட் நிலைமையைக் கருத்திற் கொள்ளாமல் அரசியல் தேவைகளுக்காக தீர்மானங்களை எடுக்கக் கூடாது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கொவிட் தொற்று பரவலைக் காரணம் காட்டி அரசாங்கம் நாட்டில் இராணுவம் மற்றும் பொலிஸ் ஆட்சியை ஸ்தாகிபிக்க முயற்சிக்கிறது.

சிவில் உடையில் பொலிஸாரை அனுப்பி அரசியல் செயற்பாட்டாளர்களையும் தொழிற்சங்கத்தினரையும் கைது செய்யும் வெள்ளை வான் கலாசாரத்திற்கு இடமளிக்கப் போவதில்லை.

தற்போது நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் அளவு குறைவடைந்துள்ள போதிலும், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது.

இந்தியாவில் அண்மையில் ஏற்பட்டிருந்த நிலைமையையே தற்போது இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மூன்றாவது அலை நிறைவடைந்து நான்காவது அலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

சகல மாகாணங்களிலும் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால், வெகுவிரைவில் ஒட்சிசன் வழங்களிலும் சிக்கல் ஏற்படக் கூடும்.

நாட்டை முடக்காமல் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது. வைரஸ் பரவல் வேகத்துடன் ஒப்பிடும் போது, கொள்வனவு செய்யப்படும் தடுப்பூசிகள் போதுமானதல்ல. தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





அரசியல் தேவைகளுக்காக தீர்மானங்களை எடுக்காதீர் - எதிரணி எம்.பி கோரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு