கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகள் இருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒக்ஸிஜன் மட்டம் குறைவடைந்தமையினால் குறித்த இருவரும் வெளி நோயாளர் பிரிவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை வரையில் இலங்கையில் ஒக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 615 ஆகும். எதிர்வரும் நாட்களில் ஒக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 1000 வரை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒக்ஸிஜனுக்கான தேவை பாரியளவில் அதிகரிக்க கூடும் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
No Comments Here ..