தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்காமல் வேலை செய்ய வேண்டிய முறையில் செயற்பட வேண்டியது, அனைத்து மக்களினதும் பொறுப்பாகும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான மக்கள் நாட்டை முடக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். சுகாதார சட்டத்திட்டங்களை முழுமையாக பின்பற்றுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
விசேடமாக பிரபல வர்த்தக நிலையங்கள் உட்பட பொது இடங்களில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனங்களின் கடமைகளுக்காக தங்களுக்கு அவசியமான ஊழியர்களை மாத்திரம் அழைக்குமாறு தான் நிறுவனங்களின் பிரதானிகளிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் விருந்துகள் உட்பட அனைத்து நிகழ்வுகளில் இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொள்வதனை முழுமையாக தவிர்க்க வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..