ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட கருத்து வேடிக்கையானது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் தீலிபன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்ளவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பிற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தயாராகி வருவதாக நேற்றுமுன்தினம் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் - வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட குலசிங்கம் தீலிபன், நாடாளுமன்ற உறுப்பினராக சுரேஷ் பிரேமச்சந்திரன் பதவி வகித்திருந்தால் அந்தக் கருத்தை வெளியிட்டிருக்க மாட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..