22,Nov 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அற்புத மருந்து “RREGN-COV2” இலங்கைக்கும் கிடைக்குமா? சந்திம ஜீவந்தர தகவல்

கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருந்தான REGN-COV2 ஐ இலங்கை மருத்துவர்களும் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர்.

கொரோனா வகைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தும் ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த மருந்து கொரோனா இறப்புகளை குறைக்கலாம் என்றும் எழுதினார்.

குறிப்பாக அதிக ஆபத்துள்ள கொரோனா தொற்று உள்ளவர்களின் உயிரைக் காப்பாற்ற இந்த மருந்து உதவும் என்று அவர் பரிந்துரைத்தார்.

மருந்தை உட்கொள்ளும் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவுவது மிகக் குறைவு என்று டாக்டர் சந்திம ஜீவந்தர கூறுகிறார்.

"REGN-COV2" என்ற மருந்து இதய நோய் மற்றும் தொற்றுநோய்களின் தாக்கத்தை குறைக்கும் என்று அவர் நம்புகிறார்.

எனினும் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு அரசியல் அழுத்தத்தின் காரணமாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருந்தை இறக்குமதி செய்ய உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடம் ஒரு தனியார் நிறுவனம் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

எனினும், அரசியல் செல்வாக்கு காரணமாக ஒப்புதல் திடீரென ரத்து செய்யப்பட்டது என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் எப்படி திடீரென ஒப்புதல் ரத்து செய்யப்பட்டது என்று இலங்கை சுகாதாரத் துறையிடம் சிங்கள ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியது.

இதற்கு “மருந்தின் அதிக விலை காரணமாக இந்த மருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டதாக” மூத்த சுகாதார செய்தித் தொடர்பாளர் ஒருவர் பதிலளித்துள்ளார்.

அந்த வகையில் REGN-COV2 மருந்தின் ஒரு டோஸ் சுமார் ஒரு இலட்சத்து 27,000 எனவும் குறிப்பிட்டுள்ளார்.





உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அற்புத மருந்து “RREGN-COV2” இலங்கைக்கும் கிடைக்குமா? சந்திம ஜீவந்தர தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு