28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர், பக்க விளைவால் உயிரிழப்பு

பைசர் தடுப்பூசி மிகமிக அரிதாக பக்க விளைவை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ள நியூசிலாந்து தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம், ஒரு பெண் இறந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது. உலகளவில் பைசர் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது எனக் கருதப்படுகிறது. இந்த தடுப்பூசியால் பக்க விளைவு மிகமிகக்குறைவு என்பதால் வளர்ந்த நாடுகள், தங்களுடைய நாட்டு மக்களுக்கு பைசர் தடுப்பூசியை கொள்முதல் செய்து செலுத்தி வருகின்றன.

நியூசிலாந்திலும் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண் ஒருவர் உடல்நலம் குன்றி திடீரென உயிரிழந்துள்ளார். இதுகுறித்து நியூசிலாந்தின் கொரோனா தடுப்பூசி கண்காணிப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டது. அப்போது அந்த பெண் இதயத் தசைகள் வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக கருதுவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதயத் தசைகள் வீக்கத்தால் ரத்த ஓட்டம் மற்றும் இதயத் துடிப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இதன்மூலம் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் பக்க விளைவு காரணமாக முதன்முறையாக உயிரிழந்துள்ளார் என நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பெண்ணின் வயதை குறிப்பிடவில்லை.


உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர், பக்க விளைவால் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு