கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய பிசிஆர் ஆய்வகம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லை என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,
தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் பல தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளன.
இதில், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய பிசிஆர் ஆய்வகத்தின் தொழில்நுட்பப் பணிகள் இன்றும் முடிவடையவில்லை என தெரியவந்துள்ளது.
தொழில்நுட்பப் பணிகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்பே கடந்த 25 ஆம் திகதி இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த இரண்டு நாட்களில் ஆய்வகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிசிஆர் சோதனை அறிக்கைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
PCR சோதனை அறிக்கைகள் 3 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினாலும், சில பயணிகள் சுமார் 15 மணி நேரம் விமான நிலையத்தில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பல வெளிநாட்டு பயணிகள் பயணிகள் தங்கள் பிசிஆர் சோதனை அறிக்கைகள் வெளியாகும் வரை மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
0 Comments
No Comments Here ..