06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பு

ஜெர்மனியில் கொரோனா 4-வது அலை தாக்கி இருப்பதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா முதல் அலையின் போது கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன்பிறகும் பலமுறை அலைகள் தாக்கி உள்ளது.

கடந்த சில மாதங்களாக நோய் தாக்கம் மிகவும் குறைந்து வந்தது. தடுப்பூசி போட்டதால் நோய் குறைந்து வருவதாக கருதப்பட்டது.

ஆனால் இப்போது மீண்டும் கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்துள்ளது. இதில் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனியில் கொரோனா 4-வது அலை தாக்கி இருப்பதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் மட்டுமே 52,826 பேரை புதிதாக தாக்கியுள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்ற நிலை பெல்ஜியத்திலும் நிலவுகிறது. அங்கு ஒருமாத காலத்துக்கு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியம் செல்ல கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அது இப்போது 10 வயதுக்கு மேல் என்று குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மக்களுக்கும் 3-வது பூஸ்டர் ஊசி செலுத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

இதேபோல ஆஸ்திரியா, ஆஸ்திரேலியாவில் பாதிப்பு அதிகமாகி இருப்பதை அடுத்து நோய் தொற்று ஏற்படலாம் என கருதப்படும் 20 லட்சம் மக்கள் வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து, சுவீடன், செக்குடியரசு, ஸ்லோவாக் கியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் ஏற்கனவே 5-வது அலையின் தாக்கம் தொடங்கி இருந்தது. கடந்த சில நாட்களாக அங்கும் தொற்று மிக அதிகரித்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு