05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

தடுப்பூசி வலுக்கட்டாயமாக செலுத்தப்படாது - அசேல குணவர்தன

உள்ளூர் சட்டங்களின்படி தடுப்பூசி வலுக்கட்டாயமாக செலுத்தப்படாது எனவும் அனுமதிப் படிவத்தில் கையொப்பமிட்ட பின்னரே தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன (Acela Gunawardena) தெரிவித்துள்ளார்.

நேற்று (30) இடம்பெற்ற இணையத்தள ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜைக்கும் கொரோனா தடுப்பூசியை வலுக்கட்டாயமாக செலுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.  குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னர், பெற்றோரின் அனுமதி பெறப்படும் எனவும் குறிப்பிட்டார்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படக்கூடாது என்று பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களை அவ்வாறான குற்றச்சாட்டுகளை நிறுத்துமாறு தெரிவித்தார்.

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தடுப்பூசி முயற்சியின் வெற்றியினால் க.பொ.த உயர்தரப் பரீட்சை அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை அண்மையில் இடம்பெற்றதாக அவர் கூறினார்.





தடுப்பூசி வலுக்கட்டாயமாக செலுத்தப்படாது - அசேல குணவர்தன

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு