18,May 2024 (Sat)
  
CH
WORLDNEWS

உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்பதுஉலகளவில் நாடுகள் மற்றும் அதன் குடிமக்களின் பொருளாதார செழிப்பை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதன்படி, குறித்த பட்டியலில் முதலிடத்தில் Luxembourg நாடும், 10 வது இடத்தில் நோர்வே நாடும் இடம்பெற்றுள்ளது. போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 2024க்கான உலகளாவிய வளர்ச்சி என்பது 3.1 சதவிகிதமாக இருக்கும் என்றே கணித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள மிகவும் பணக்கார நாடுகளின் பட்டியலில், லக்சம்பேர்க் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் Macao SARவும், அயர்லாந்தும் 3வது இடத்தில் சிங்கப்பூர் 4வது இடத்திலும் கத்தார் 5 வது இடத்திலும் உள்ளன.

இதில் தனிநபர் GDP-ஐ கருத்தில் கொண்டு இந்தியாவின் நிலை 129வது இடத்தில் உள்ளது என்றே தெரியவந்துள்ளது.

ஆனால் உலக GDP தரவரிசையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜேர்மனியை அடுத்து இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியீடு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு