இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு நேரத்தை குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
எனினும் இது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியாது என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இருப்புக்களை பொறுத்தே மின்வெட்டை முழுமையாக தவிர்ப்பதா அல்லது மின் தடை செய்யப்படும் நேரத்தை குறைப்பதா என்பதை தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்று முதல் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
துறைசார் அதிகாரிகளுடன் ஜனாதிபதி மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்த இந்த அறிவிப்பு வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு இன்று (சனிக்கிழமை) 4 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின் வெட்டும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும் E & F பகுதிகளுக்கு காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 4 மணி நேரம் மின்வெட்டும் மற்றும் மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..