22,Dec 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

10 கோடி பணத்தை மோசடி செய்த நபர் கைது

ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி 10 கோடிக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இதேவேளை சந்தேக நபரால் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக மிரிஹான பொலிஸ் தலைமையகத்தில் மாத்திரம் 15க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


சந்தேகநபர் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையில் பணம் பெற்றுள்ளதுடன் அவர் கனடா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி ஏமாற்றியுள்ளதாக நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


சந்தேக நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளதுடன், சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக செயல்முறை பணிகள் தாமதப்படுத்தப்படுவதாகக் கூறி தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபருக்கு எதிராக 30 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் சந்தேக நபர் பல பிரதேசங்களில் இவ்வாறு பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.


மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை மிரிஹான, மடிவெலவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







10 கோடி பணத்தை மோசடி செய்த நபர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு