எகிப்தில் ஜெர்மன் ஷெப்பர்டு உள்பட 16 வகையான நாய்களை வீடுகளில் வளர்க்க தடை விதித்து அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அண்டை வீட்டாருடன் சண்டை பிடித்த ஒருவரை ராட்வீலர் நாய் கடித்து குதறியதில் அவர் உயிரிழந்தார்.
இதனால் நாடு முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்பை தொடர்ந்து புது சட்டத்தை எகிப்து அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி ஜெர்மன் ஷெப்பர்டு, பிட் புல்ஸ், ராட்வீலர்ஸ், டாபர் மேன்ஸ் உள்ளிட்ட 16 வகை நாய்கள் ஆபத்தானவை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த நாய்களை வளர்ப்போர் ஒரு மாதத்திற்குள்ளாக கால்நடை மருத்துவமனைகளில் ஒப்படைக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதற்கு நாய்களை வளர்க்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மகள்களை போல், மகன்களை போல் தாங்கள் நாய்களை வளர்த்து வருவதாகவும், அதை தங்களால் ஒப்படைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தை இயற்றியவர்கள் நாய்களையே பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் காட்டமாக தெரிவித்துள்ளனர்
0 Comments
No Comments Here ..