தெரியாத எண்ணில் இருந்து வரும் வாட்ஸ் அப் அழைப்புகளை தானாக சைலண்ட் செய்து கொள்ளும் புதிய வசதியை whatsapp நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் பயனாளர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு விதமான அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
வாட்ஸ் அப்பில் தெரியாத எண்களில் இருந்து வரும் ஸ்பேம் போன்ற மோசடிக்கான அழைப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது போன்ற அழைப்புகளை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Contact list-ல் இல்லாத மற்றும் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வரும் வாட்ஸ் அப் அழைப்புகளை தானாக சைலண்ட் செய்து கொள்ளும் புதிய வசதியை whatsapp நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..