12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

5000 கி.மீ., தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது

நீர்மூழ்கி கப்பலில் இருந்து 5000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை உருவாக்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது.


இந்தியாவிடம் தற்போது உள்ள ஏவுகணைகளில், அக்னி-5 மட்டும் தரையில் இருந்து 5000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது. நீர்மூழ்கி கப்பலில் இருந்து தாக்கும் ஏவுகணைகளில் அதிகபட்சம் கே-4 மட்டும் 3,500 கி.மீ., தூரம் சென்று தாக்கும். விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்பரப்பில் நீருக்கடியில் இரண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, ​ஐ.என்.எஸ் அரிஹந்த் பி -05 அணு ஏவுகணையை 750 கி.மீ., தூரத்துடன் கொண்டு செல்கிறது.

இதேபோல், நீர்மூழ்கி கப்பலில் இருந்து 5000கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை அழிக்க கே-வரிசையில் புதிதாக ஒரு ஏவுகணை உருவாக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள நாடுகள் மற்றும் தென்சீனக் கடல் பகுதி உள்ளிட்ட இந்தோ-பசிபிக்கில் உள்ள நாடுகளில் தாக்குதல் நடத்த முடியும்.


இது குறித்து மூத்த அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த ஏவுகணையை உருவாக்கும் திறன் எங்களிடம் இருந்தாலும், இதைப்பற்றி முடிவெடுப்பது அரசு தான். இதுவரையில் இதற்கான அனுமதி கிடைக்கவில்லை, என்றனர்.




5000 கி.மீ., தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு