08,May 2024 (Wed)
  
CH
விளையாட்டு

கொழும்பு இந்துக்கல்லூரி மற்றும் யாழ் இந்துக்கல்லூரி இடையிலான கிரிக்கெட் போட்டி

தமிழ் பேசும் கிரிக்கெட் பிரியர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு இந்து கல்லூரிக்கும் யாழ். இந்து கல்லூரிக்கும் இடையிலான 12ஆவது 'இந்துக்களின் பெருஞ்சமர்' இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிமை (30)ஆரம்பமாகவுள்ளது.


இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 'இந்துக்களின் பெருஞ்சமர்' 1981இல் ஆரம்பமாகி 1982இலும் நடத்தப்பட்டது. ஆனால், 1983இல் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக அது தடைப்பட்டது. 12 வருடங்களில் பின்னர் 2005இல் 40 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு 'இந்துக்களின் பெருஞ்சமரு'க்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டது.


அதன் பின்னர் போக்குவரத்து உட்பட இன்னோரன்ன பிரச்சினைகள் காரணமாக மீண்டும் இந்துக்களின் சமர் கைவிடப்பட்டு 2013இல் 4ஆவது அத்தியாயம் கொழும்பில் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 2019வரை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் மாறிமாறி நடத்தப்பட்டது.


2019இல் பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் கடைசியாக இந்துக்களின் பெருஞ்சமர் நடத்தப்பட்டது.

கொவிட் - 19, பொருளாதார நெருக்கடி, போராட்டம் ஆகியன காரணமாக மீண்டும் தடைப்பட்ட இப் போட்டி கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் அரங்கேற்றப்பட்டது.


இந் நிலையில் இந்துக்களின் பெருஞ்சமர் கிரிக்கெட் போட்டியைத் தங்குதடையின்றி நடத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு இரண்டு பாடசாலைகளினதும் அதிபர்கள், பழைய மாணவர்கள் சங்கங் களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. இதற்கு அமைய இந்த வருடத்தில் இருந்து இப் போட்டியை வருடாந்தம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.





கொழும்பு இந்துக்கல்லூரி மற்றும் யாழ் இந்துக்கல்லூரி இடையிலான கிரிக்கெட் போட்டி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு