28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

பிரான்ஸின் மிகப்பெரிய நூலகம் தீ வைத்து எரிப்பு

பிரான்சில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அந்நாட்டின் மிகப்பெரிய நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியாக நான்டெரில் நிஹல் மெர்டோவ்ஸ்(17) சிறுவன் கடந்தவாரம் செவ்வாய்க்கிழமை இரவு காரில் சென்றபோது போக்குவரத்து காவலரால் சுட்டு கொல்லப்பட்டான். 


அல்ஜீரியாவை பூர்வீகமாக கொண்ட சிறுவன் காவலரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோ வௌியாகி நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. 


தலைநகர் பாரீஸ், லியோன், மார்சேய், நைஸ், ஸ்டார்ஸ்போர்க் உள்பட பல முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சாலை தடுப்புகள், குப்பை தொட்டிகள், டயர்கள் ஆகியவற்றை அடித்து, நொறுக்கி தீ வைத்து எரித்தனர். இந்த நிலையில் லட்சக்கணக்கான அறிய புத்தகங்களை கொண்ட மிகப்பெரிய மார்சேய் நூலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.


இந்த நூலகத்தில் சுமார் 90 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதே போல 830 ஆண்டுகள் முன்பு நாளந்தா பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டன





பிரான்ஸின் மிகப்பெரிய நூலகம் தீ வைத்து எரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு