29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 12 நாட்களுக்கு பிறகு மீண்டும் நேற்று டிரோன் தாக்குதல்

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 16வது மாதமாக நீடித்து வருகிறது. இதில் ரஷ்யாவின் பிடியில் இருந்த பல பகுதிகளை உக்ரைன் மீட்டுள்ளது. அதே நேரம், உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் தொடர்கிறது. 

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 12 நாட்களுக்கு பிறகு நேற்று தனது முதல் டிரோன் தாக்குதலைத் தொடங்கியது. 


இதில் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய டிரோனின் நொறுங்கிய பாகம் விழுந்து சிறுவன் ஒருவன் காயமடைந்ததாக கீவ் பிராந்திய ஆளுநர் ரஸ்லான் க்ராவ்சென்கோ கூறியுள்ளார்.


உக்ரைன் விமானப் படையின் கூற்றுப்படி, ரஷ்ய படையினரால் ஏவப்பட்ட 8 ஷாகித் டிரோன்கள் மற்றும் 3 கலிபர் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிகிறது. கெர்சன் பகுதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர். 


இதில் இருவர் உயரமான கட்டிடங்களை குறிவைத்து ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்ததாக கெர்சன் பிராந்திய அதிகாரி அவரது டெலிகிராம் சமூக தளத்தில் கூறியுள்ளார்





உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 12 நாட்களுக்கு பிறகு மீண்டும் நேற்று டிரோன் தாக்குதல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு