03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

யுத்தத்தின் மத்தியில் 6 வயது சிறுமிக்கு இருதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

மூளையில் ஏற்படும் அனியூரிசம் (Brain aneurysm ) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு மூளை சாவடைந்த 4 வயது சிறுவனின் இருதயமே குறித்த சிறுமிக்கு பொருத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மூன்று மணித்தியாலங்கள் இருதயமாற்று சத்திர கிசிச்சை நடைபெற்றுள்ளது. இதனை திங்களன்று உக்ரேனின் சுகாதார அமைச்சகத்தின் இருதய சத்திர சிகிச்சை மையம் அறிவித்துள்ளது இதுவே, உக்ரேனில் 6 வயதுடைய சிறுவர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை ஆகும்.


இருதய சத்திர சிகிச்சை மையத்தின் தலைமை விஞ்ஞானி வைத்தியர் போரிஸ் டோடுரோவ் தலைமையிலான வைத்தியர்கள் குழுவால் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.

"நன்கொடையாளர் மற்றும் பெறுநர் இருவரும் மிகவும் சிறிய வயதுடையவர் என்பதால் சத்திர சிகிச்சை தனித்துவமானது என்பதோடு, மாற்று சத்திர சிகிச்சைக்கு வைத்தியர்களிடமிருந்து அதிக முயற்சி தேவைப்பட்டது.

"சத்திர சிகிச்சை சுமூகமாக நடந்தது. சத்திர சிகிச்சை முடிந்து இரண்டு மணித்தியாலங்களுக்குப் பிறகு சிறுமி வெளியேற்றப்பட்டார்" என வைத்தியர் டோடுரோவ் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.





யுத்தத்தின் மத்தியில் 6 வயது சிறுமிக்கு இருதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு