கொழும்பு பி.சரவணமுத்து அரங்கில் இன்று புதன்கிழமை இப்போட்டி நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் களத்தடுப்பு செய்ய தீர்மானித்தது.
அதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவி சோபி டிவைன் 25 பந்துகளில 46 ஓட்டங்களைக் குவித்தார். சுசி பேட்ஸ் 38 பந்துகளில் 37 ஓட்டங்களைக் குவித்தார்.
இலங்கை அணி பந்துவீச்சாளர்களில் இனோகா ரணவீர 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், சுகந்திகா குமாரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 14.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 143 ஓட்டங்களைக் குவித்தது,
அணித்தலைவி சமரி அத்தபத்து 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட 80 ஓட்டங்களைக் குவித்தார். ஹர்சிதா சமரவிக்கிரம 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைக் குவித்தார்.
இத்தொடரின் முதல் இரு போட்டிகளில் நியூஸிலாந்து அணி வென்றது. இதனால் இத்தொடரின் வெற்றியை அவ்வணி 2:1 விகிதத்தில் தனதாக்கியது.
3 ஆவது போட்டியின் சிறப்பாட்டக்காரரராக சமரி அத்தபத்து தெரிவானார். இத்தொடரின் சிறப்பாட்டக்காரராக சுசி பேட்ஸ் தெரிவானார்.













0 Comments
No Comments Here ..