19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 பேரும் சீனர்கள்

ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில், கொறோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சீன பெண்ணுடன் மேலும் 8 பேர் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பலப்பிட்டி பகுதியில் சிகிச்சை பெறுவதற்காக சென்ற விருந்தகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்த மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 7 பேரும் சீன பிரஜைகள் என குறிப்பிட்டார்.

இந்த நிலையில், குறித்த ஏழு பேர் தொடர்பான மருத்துவ பரிசோதனை அறிக்கை, இன்று பிற்பகல் அளவில் கிடைக்கப்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனூடாக, அவர்களுக்கு கொறோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதனை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொறோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட முதலாவது நபராக அடையாளம் காணப்பட்ட சீன பெண், தற்போது குணமடையும் சாத்தியப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் இரண்டு தினங்கள் அளவில் அவரை மருத்துமவனையிலிருந்து வெளியேற்ற முடியும் என அதன் விசேட மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபெ பிராந்தியத்திலிருந்து கடந்த 19ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த 43 வயதுடைய குறித்த சீன பெண், கட்டுநாயக்க, சிகிரியா, கண்டி, நுவரெலியா, அவுன்கலை முதலான பகுதிகளில் உள்ள விருந்தகங்கள் தங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் தங்கியிருந்த விருந்தகங்ளை சோதனைக்கு உட்படுத்தவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் மேலும் சில பெண்களுடன் கடந்த தினம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இந்த நிலையில், அவர் நாட்டிலிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த தினம் அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவர் கொறோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் தொடர்ந்து சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொறோனா வைரஸ தொற்று பரவுவதை தடுப்பதற்காக சர்வதேச தர நியமங்களுக்கு அமைய சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் அது தொடர்பில் அவசியமற்ற வகையில் அச்சமடைய தேவையில்லை என பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நிலமையை முகாமைத்துவம் செய்யக்கூடிய வகையில், தெளிவான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாக, பல்வேறு துறையினருடன் நேற்று நடத்திய சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுகாதார சேவை பணிப்பாளர் நாயகமான மருத்துவர் அனில் ஜாசிங்க, குறித்த வைரஸ் தொடர்பான சிகிச்சைக்காக நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கிய 12 மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகம், நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, களுபோவில, கராப்பிட்டிய, அனுராதபுரம், யாழ்ப்பாணம், குருணாகலை, இரத்தினபுரி, பதுளை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய மருத்துவமனைகள் கொறோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்களாயின் அந்தந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய சாத்தியக்கூறுகள் இருக்குமாயின், அவர்களை தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளிப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகமான மருத்துவர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த வரைஸ் தொற்று தொடர்பான விபரங்களை வழங்குவதற்கு 0710107107, 0113071073 ஆகிய 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி சேவை இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 பேரும் சீனர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு