08,Feb 2026 (Sun)
  
CH
WORLDNEWS

ஈரான் நீதிமன்ற தாக்குதல்: 8 பேர் பலி, பலத்த காயம் - ஜெய்ஷ் அல்-அதில் பொறுப்பேற்பு

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானின் தலைநகரான ஜாஹேதானில் உள்ள நீதிமன்றக் கட்டடத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்திருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.


இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஷ் அல்-அதில் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


மத்திய ஜாஹேதானில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதிகளின் அறைக்குள் துப்பாக்கிதாரிகள் நுழைந்து, சரமாரியாகத் தாக்குதல் நடத்தியதில், 13 நீதிபதிகள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.





ஈரான் நீதிமன்ற தாக்குதல்: 8 பேர் பலி, பலத்த காயம் - ஜெய்ஷ் அல்-அதில் பொறுப்பேற்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு