இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகத் திறமையாளராக வலம் வரும் விஜய் ஆண்டனி, தனது 25வது படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழாவில் புதிய தலைமுறை கலைஞர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ் திரை உலகில் புதியவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவது குறித்து அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, "சாய் அபயங்கர் திறமையோடு வந்திருக்கிறார். அதனால் எல்லோரும் அவரை இசையமைக்க அழைக்கின்றனர். சாம் சி.எஸ்., சாய் அபயங்கர் இருவருமே திறமையானவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி 'சுக்கிரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இசையமைப்பாளராகக் கொடிகட்டிப் பறந்து வந்த அவர், 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 'சலீம்', 'பிச்சைக்காரன்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கடைசியாக, அவர் பல படங்களில் எடிட்டராகப் பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் 'மார்கன்' படத்தில் நடித்துள்ளார்.













0 Comments
No Comments Here ..