08,Feb 2026 (Sun)
  
CH

டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஆற்றில் விழுந்த 4 வயது சிறுமி சடலமாக மீட்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் ஏந்திச் செல்லும் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இன்று (ஜூலை 26) இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்லவிருந்த நிலையில், சிறுமியின் தாய் தனது மகளை தயார் நிலையில் வைத்துவிட்டு, தான் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், சிறுமி வீட்டின் அருகிலிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சிறுமி காணாமல் போனதை அடுத்து, பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணிநேர தேடுதலுக்குப் பின்னர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்டு கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


சடலமாக மீட்கப்பட்ட சிறுமி கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய கிரேக்சிக்கா நெகோமி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் தற்போது சட்டவைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஆற்றில் விழுந்த 4 வயது சிறுமி சடலமாக மீட்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு