27,Apr 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

நிலவில் 10 மீட்டர் பள்ளம் தோண்டிய ரஷ்யாவின் "லூனா 25"

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷியா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷிய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது.

புவி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19-ம் தேதி நுழைக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. இந்த லூனா-25 விண்கலம் விழுந்த இடத்தை நிலவை கண்காணித்து வரும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது.


லூனா -25 விண்கலம் தரையிறங்க வேண்டிய இடத்துக்கு அருகில் புதிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இது லூனா-25 விண்கலம் விழுந்த இடமாக இருக்க வாய்ப்புள்ளது என எல்ஆர்ஓ குழு முடிவு செய்துள்ளது. இந்த புதிய பள்ளம், 10 மீட்டர் அகலத்தில் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மேலும், நிலவின் குறிப்பிட்ட பகுதியை 2020 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படத்தோடு, தற்போது லூனா 25 விழுந்த பிறகு எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு நாசா வெளியிட்டுள்ளது.




நிலவில் 10 மீட்டர் பள்ளம் தோண்டிய ரஷ்யாவின் "லூனா 25"

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு