இந்தியாவிற்கான கனடா தூதரகம் தனது பணியாளர்கள் சமூக ஊடகங்களில் மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்கவுள்ளதாக
அறிவித்துள்ளது.
இந்தியா தனது தூதரக இராஜதந்திரகள் மற்றும் பணியாளர்களிற்கு உரிய பாதுகாப்பை வழங்கும் என எதிர்பார்ப்பதாக கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கான கனடா தூதரகமும் துணை தூதரங்களும் தொடர்ந்தும் திறந்திருக்கும் சேவைகளை வழங்கும்எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது இன்று (செப்.21) முதல் நிறுத்தம் செய்துஇந்திய மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக விசா வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனமான பிஎல்எஸ் இன்டர்நேஷனல் தனது இணையதளத்தில் "இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு: செயல்பாட்டுக் காரணங்களுக்காகஇ செப்.21-ம் தேதி முதல்இ அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்திய விசா சேவை நிறுத்தப்படுகிறது. மேலும்இ தகவல்களுக்கு பிஎல்எஸ் இணையதளத்தைப் பாருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில்இ இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
0 Comments
No Comments Here ..