மன்னார் சௌத்பார் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ´டைனமைட்´ வெடி பொருட்கள் சிலவற்றை நேற்று (31) மாலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மன்னார் - சௌத்பார் கடற்கரை பகுதியில் விசேட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொலித்தின் பையை சோதனையிட்ட போது குறித்த பையினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதி டைனமைட் வெடி பொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
எனினும் சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப் படவில்லை.
மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..