இலங்கையின் பல வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்படவிருந்த தரமற்ற 36 ஆயிரம் முக கவசங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த முகக் கவச தொகையை நுகர்வோர் விவகார அதிகார சபை, தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளளது.
தரமற்ற இந்த முகக் கவசங்கள் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இரண்டு இடங்களில் இந்த முகச் கவசங்கள் மீட்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முக கவசங்களுக்கு அதிக கிராக்கி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தரமற்ற முககவசங்களை பெற்றுக்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..