20,May 2024 (Mon)
  
CH
WORLDNEWS

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு – முன்னிலையில் யார் தெரியுமா?

ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடியவுள்ள நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் களமிறங்கியுள்ளார்.


இந்தநிலையில், தற்போது குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும் தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.


ஏற்கனவே நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு – முன்னிலையில் யார் தெரியுமா?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு