ஐ.பி.எல் தொடரில் தீர்மானமிக்க போட்டியான சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் ஜெலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. பிளோஓப் சுற்றுக்கு 4ஆவது அணியாக தகுதி பெறும் அணிக்கான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் ஜெலஞ்சர் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் Faf du Plessis 54 ஓட்டங்களையும், Virat Kohli 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதற்கமைய சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 219 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..