இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழில் திரைப்படம் உருவாக உள்ள நிலையில், அதில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பயோபிக் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அதிலும் சமீப காலமாக விளையாட்டு மற்றும் அரசியல் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து வெளிவந்த பயோபிக் படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றன.
குறிப்பாக தோனியின் பயோபிக் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது கங்குலி, நடராஜன் ஆகியோரது பயோபிக் படங்கள் தயாராகி வருகின்றன. இதில் நடராஜன் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.
அதேபோல் அரசியல் பிரபலங்களை பற்றிய பயோபிக் படங்களும் அதிகளவில் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தமிழில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி என்கிற திரைப்படம் வெளியானது.
அண்மையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதையை யாத்ரா என்கிற பெயரில் பயோபிக் படமாக வெளியிட்டு இருந்தனர். இதில் மம்முட்டி, ஜீவா ஆகியோர் நடித்து இருந்தனர்.
அந்த வகையில் இந்திய பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இதுவரை ஏராளமான பயோபிக் படங்கள் வெளிவந்துள்ளன.
இந்தியில் விவேக் ஓபராய் நடிப்பில் பிஎம் நரேந்திர மோடி என்கிற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு பயோபிக் படம் ரிலீஸ் ஆனது. இதுதவிர மன் பைரகி, மோடி ஜர்னி ஆஃப் காமன் மேன், நமோ சவுனே கமோ, மோடி ககா கா கவுன் என மோடியின் பயோபிக் படங்கள் இதுவரை ஏராளமானவை வந்துள்ளன.
அந்த வரிசையில் தற்போது புதிதாக தமிழில் மோடியில் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ஒரு பயோபிக் படம் உருவாக உள்ளது.
அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த பயோபிக்கில் மோடியாக, நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நடிகர் சத்யராஜ் இதற்கு முன்னர் பெரியாரின் பயோபிக்கில் நடித்திருந்தார். அதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..