23,Nov 2024 (Sat)
  
CH
WORLDNEWS

இரவை பகலாக்கிய விண்கல் - வைரல் வீடியோ!

போர்த்துக்கல் நாட்டில் நிலவை விட பிரகாசமான விண்கல் ஒன்று வானில் இருந்து பூமியை நோக்கி பாய்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்கு இடையேயான வானத்தை ஒரு மாபெரும் விண்கல் கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.  விண்கல் காரணமாக பிரகாசமான நீல ஒளியால் ஒளிரும் வானம் இரவை பகல் போன்று மாற்றியது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் இணையவாசிகள் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் பூமியின் வளிமண்டலத்தில் மணிக்கு 61,000 கிமீ வேகத்தில் நுழைந்த விண்கல் எவோரா மாவட்டத்தின் ஃபோரோஸ் டி வால்லே ஃபிகுரா பகுதியில் 91 கிமீ உயரத்தில் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

அந்த விண்கல் பாறை வடகிழக்கு நோக்கி நகர்ந்து கானோ பாரிஷ் மீது சுமார் 19 கிலோமீட்டர் உயரத்தில் சிதைந்தது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்கற்கள் பொதுவாக விண்வெளியில் உருவாகின்றன. அவை பூமியின் மேற்பரப்பை அடையும் போது சிறிய துண்டுகளாக உடைகின்றன.

அந்த துண்டுகள் வெவ்வேறு அளவுகளில் உடைந்து விழலாம். ஆனால், இப்போது விழுந்த விண்கல்லின் அளவு எதிர்பார்த்ததை விட பெரிதாக இருந்ததாகவும். முதற்கட்ட ஆய்வில் விண்கல் முழுவதுமாக அழிக்கப்படவில்லை என்றும், அதன் ஒரு பகுதி பூமியில் விழுந்தது என்றும் கூறப்படுகிறது.




இரவை பகலாக்கிய விண்கல் - வைரல் வீடியோ!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு