கேகாலை - அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 26 பேர்காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (18) மாலை 4.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கண்டியில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து அதிவேகமாக பயணித்து மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் கேகாலை பொது வைத்தியசாலை மற்றும் தோரணகஹபிட்டிய கிராமிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான பேருந்து ஒன்றின் சாரதி ஆபத்தான நிலையில், உள்ளதாகவும் மற்றையவர் பெண் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..