21,Nov 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

குரோதி வருடம் பிறக்கும் நேரத்தில் சர்ச்சை! சாம்பசிவ சிவாச்சார்யார் விளக்கம்!

சித்திரை புத்தாண்டானது குரோதி வருடமாக பிறக்கின்றதுடன் குரோதி என்பது விரோதங்கள்,பகைமைய ஏற்படுத்தும் வருடமாகவும் அரசியல் ரீதியாகவும் மக்களிடையே பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்துவதாக அமைவது எனவும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தெரிவித்தார். தமிழர்களின் சித்திரைப்புத்தாண்டு பிறப்பு தொடர்பில் நிலவிவரும் பல்வேறுவகையான சந்தேகங்களை போக்கும் வகையில் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் மஹாராஜ ராஜகுரு ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் விளக்கமளித்தார்.

இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு, கிரான் ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் இன்று (03) நடைபெற்றது. சித்திரை வருடபிறப்பானது 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை குரோதி எனும் பெயரில் மலர்கின்றது.   முதல்நாள் 13 ஆம் திகதி, சனிக்கிழமை இரவு புதுவருடம் பிறக்கும் நேரம் என பஞ்சாங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழம்பங்களை நிவிர்த்தி செய்யும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. குரோதி என்பது விரோதங்கள்,பகைமைய ஏற்படுத்தும் வருடமாகவும் அரசியல் ரீதியாகவும் மக்களிடையே பொருளாதார ரீதியாகவும் பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்துவதாக அமைவது எனவும் தெரிவித்தார்.





குரோதி வருடம் பிறக்கும் நேரத்தில் சர்ச்சை! சாம்பசிவ சிவாச்சார்யார் விளக்கம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு