20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

அரசாங்க வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி.. திட்டமிட்டவாறு மார்ச் மாதம் அரச நியமனம்..!!

திட்டமிட்டபடி வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் உயர் கல்வி டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நியமனங்கள் வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நிதி மற்றும் திட்டமிடல் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம், அரை அரசு மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கமைய, பட்டப்படிப்பு பொருத்தமான தொழில்வாய்ப்பினை வழங்குவததே அரசாங்கத்தின் நோக்கமாகும். நாம் பட்டதாரிகளுக்கு வழங்கிய உத்தரவாதத்திற்கமைய சுமார் 53,000 வரையான பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவோம்.பல்வேறு அரச நிறுவனங்களில் 180 நாட்களுக்கு அதிகமான நாட்கள் பணியாற்றிய ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. அப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அந்தந்த அரச நிறுவனங்களுடன் கலந்துரையாடி தகமையுடையவர்களுக்கு பணியை நிரந்தமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய கல்விநிறுவனங்களில் கற்றும் மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த இரு மாதங்களாக நாம் கவனம் செலுத்தி வந்தோம். அப்பிரச்சினைகளுக்கும் நாம் விரைவில் தீர்வு பெற்றுகொடுக்க எதிர்பார்த்துள்ளோம். ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகாமையில் வந்து போராட்டங்களை நடத்த போராட்டக்காரர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் இத்தீர்மானத்தை எடுக்கவில்லை.

போராட்டம் நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் பிரச்சினைகளை நீக்குவதே ஜனாதிபதியின் நோக்கம். போராட்டக்காரர்களின் கோரிக்கையை செவிமடுக்க ஜனாதிபதி செயலக ஊழியர்கள் அதிகமான காலத்தை செலவிடுகிறார்கள். போராட்டக்காரர்களின் பலருடைய கோரிக்கைள் பெரும்பாலும் ஒரேமாதிரியானவைத்தான். இதனால் உங்களுடைய காலநேரத்தைப் போன்றே அரச ஊழியர்களின் காலநேரமும் விரயமாகிறது. போராட்டங்களினால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியானது மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. உழைப்பும் பணமும் வீண்விரயமாகிறது. இவ்வுண்மையை புரிந்து, அரசின் செயற்றிட்டங்கள் குறித்து நம்பிக்கை வைத்து அதனை வெற்றியடையச்செய்ய உதவுமாறு அனைத்து போராட்டக்காரர்களிடமும் அரசு வேண்டுகோள் விடுக்கிறது.




அரசாங்க வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி.. திட்டமிட்டவாறு மார்ச் மாதம் அரச நியமனம்..!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு