20,Feb 2026 (Fri)
  
CH
BREAKINGNEWS

யாத்திரை சென்ற வேன் கோர விபத்து - ஒருவர் பலி!!

யாத்திரை சென்று கொண்டிருந்த வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கல்கமுவ, மீஓயாவிற்கு அருகில் இன்று (26) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வேனின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டு மீஓயா பாலத்தில் மோதி வீதியை விட்டு விலகி மீண்டும் மரத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வேனில் சுமார் 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 07 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




யாத்திரை சென்ற வேன் கோர விபத்து - ஒருவர் பலி!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு