23,Jan 2026 (Fri)
  
CH
SRILANKANEWS

ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் பலி!! போட்டுத்தள்ளியது இஸ்ரேல்


ஹிஸ்புல்லாஹ் போராளிக் குழுவின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாகொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.


 ஹிஸ்புல்லா தலைமையகத்தில் சந்திப்பு ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போதே,இஸ்ரேலிய விமானப்படை துல்லியமான வான்வழித் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 நஸ்ரல்லாஹ் ஹிஸ்புல்லாஹ் அமைப்பை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வழிநடத்தியுள்ளார்.


இந்தநிலையில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இன்று இஸ்ரேலை நோக்கி எறிகணைகளை ஏவியதை அடுத்து, இஸ்ரேலும் பதிலுக்கு கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.


இதற்கிடையில் லெபனானுடன் பதற்றம் அதிகரித்து வருவதால், கூடுதல் உதவி வீரர்களை அணி திரட்டுவதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.


இதேவேளை இஸ்ரேலிய தாக்குதல்களால், லெபனானில் கடந்த ஒரு வாரத்தில் குறைந்தது 720 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  





ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் பலி!! போட்டுத்தள்ளியது இஸ்ரேல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு